×

சந்தேகப்படும் வகையில் பரிவர்த்தனை 41,000 யூகோ வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ820 கோடி

* திடீர் ஜாக்பாட்டால் இன்ப அதிர்ச்சி
* 13 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

புதுடெல்லி: இந்த ஆண்டு நவம்பரில் யூகோ வங்கியில் ரூ.820 கோடி மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து பல நகரங்களில் 13 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனை கொல்கத்தா, மங்களூரு நகரில் நடந்தன. இதுபற்றி யூகோ வங்கியின் புகாரின் பேரில் வங்கியில் பணிபுரியும் இரண்டு துணைப் பொறியாளர்கள் மற்றும் தெரியாத நபர்கள் மீது பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 10 முதல் நவ.13 வரை 7 தனியார் வங்கிகளில் 14000 கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஐஎம்பிஎஸ் சேனல் மூலம் யூகோ வங்கியில் உள்ள 41000 கணக்குதாரர்களுக்கு ரூ.820 கோடி அனுப்பப்பட்டுள்ளது.

திடீரென தங்கள் கணக்குகளில் சம்பந்தம் இல்லாமல் பல்வேறு தொகைகள் வரவு வைக்கப்பட்டது கண்டு வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் தனியார் வங்கிகளில் உள்ள 14000 கணக்குகளில் இந்த தொகை எடுக்கப்படவில்லை என்பதால், இது வங்கி மென்பொருள் குளறுபடியா அல்லது மோசடியா என்பது தெரியாமல் தற்போது சிபிஐ அதிகாரிகள் குழம்பிப்போய் உள்ளனர். திங்கட்கிழமை தொடங்கிய சோதனை நேற்று வரை நீடித்தது. பல வாடிக்கையாளர்கள் இந்த பணத்தை உடனே ஏடிஎம்மில் இருந்து எடுத்து விட்டது தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சந்தேகப்படும் வகையில் பரிவர்த்தனை 41,000 யூகோ வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ820 கோடி appeared first on Dinakaran.

Tags : UCO ,CBI ,New Delhi ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் தடைக்கு...