- ஸ்கோலரணா
- பெருங்குடி
- வெல்லச்சேரி
- லத்பகக்
- சென்னை
- மிக்ஜம் புயல்
- ஸ்கல்கரனாய்
- வேலச்சேரி
- மாடிபக்கம் பகுதிகள்
- பால்கரணா
- வலச்சேரி
- நடிபாகுட்
- தின மலர்
சென்னை : மிக்ஜாம் புயல் மழை நீங்கியும் பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகள் முழுவதும் வெள்ள நீர் 2வது நாளாக வெளியேறாமல் 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மீட்பு குழுவினர் படகுகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கியும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் போர்க்கால அடிப்படியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டி தீர்த்த புயல் மழையால் பல்லாவரம், நன்மங்கலம், பள்ளிக்கரணை, வெள்ளக்கல்லு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. வெள்ளக்கல்லு பகுதியில் உள்ள ஏரி முழு கொள்ளளவை அடைந்ததும் 4ம் தேதி அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை பகுதிகளில் புகுந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த குடியிருப்பின் முதல் தளம் வரை வெள்ள நீர் புகுந்ததால் அங்கு வசித்த மக்கள் உடமைகளை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று கட்டிடத்தின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.
வேளச்சேரி – மேடவாக்கம் சாலை முழுவதும் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. 2வது நாளாக நேற்றும் பள்ளிக்கரணை பகுதியில் மழை நீர் வடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் காமாட்சி மருத்துவமனை அருகே நாராயணபுரம் ஏரி ரேடியல் சாலையை மூழ்கடித்து 3 அடிக்கு மேல் தண்ணீர் நின்றதால் துரைப்பாக்கம் -பல்லாவரம் ரேடியல் சாலையில் ேநற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மடிப்பாக்கம் சதாசிவம் நகர், ராம் நகர் முழுவதும் 3 அடி உயரத்திற்கு 2வது நாளாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது. அதேபோல், கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர், நாராயணபுரம், பள்ளிக்கரணை பகுதிகள் முழுவதும் வெள்ளம் 2வது நாளாக சூழ்ந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் காசிமேடு, பட்டினப்பாக்கம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட படகுகளுடன் பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்து மீனவர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை இரவு பகலாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு தேவையாக குடிநீர் கேன், உணவு, பிரட், பால் பாக்கெட் வழங்கி வருகின்றனர்.
மிதக்கும் மயிலாப்பூர்: இதேபோல் மயிலாப்பூரை சுற்றியுள்ள பிருந்தாவன் தெரு, தேவடி தெரு, ஆர்.கே.மடம், கபாலீஸ்வரர் கோயில், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகளை கொண்டு நீரை அகற்றி வருகின்றனர்.
The post பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் வடியாத வெள்ள நீர் appeared first on Dinakaran.
