×

ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை: ஆண்டாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு


திருவில்லிபுத்தூர்: ஆண்டு தோறும் டிச.6ம் தேதி பாபர் மசூதி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நேற்று ரயிலில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இருப்பு பாதைகளை சோதனை செய்தனர். அப்போது வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சோதனை செய்தனர்.

ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ரயில் பயணிகள் நடைபாதைகள், இருப்பு பாதைகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சமாதானம் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் ஆகியோர்கள்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், ரயில்வே போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

ரயில்நிலையத்தில் உள்ள 8 நடைமேடைகள், நடைமேடை பாலம், லிப்ட்கள், குட்செட், தண்டவாளப் பகுதிகள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் பார்சல் ஆபீஸ் ஆகியவற்றிலும் சோதனை செய்தனர். மேலும், நெல்லை தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த ரயில்வே போலீசார் வெடிக்கும் தன்மை உள்ள பொருட்கள் ஏதேனும் கொண்டு வருகிறீர்களா என்று ஆய்வு செய்தனர். பின்னர் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

The post ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை: ஆண்டாள் கோயிலில் பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Andal temple ,Thiruvilliputhur ,Babri Masjid Day ,Tiruvilliputhur railway ,Virudhunagar district ,
× RELATED ஆண்டாள் கோயிலில் சிலை, கொடிமரம் மாயம் டிஎஸ்பி நேரில் விசாரணை