×

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்; தண்ணீர் தேக்கம் மக்கள் அவதி; தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா விளக்கம்

* தலைமை செயலாளர் பேட்டி

சென்னை: சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3.5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம். ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம். 42 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,200 படகுகள் சேதமடைந்துள்ளன. 30 படகுகள் முழுவதுமாகவும் 90 படகுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

சென்னை மாநகரில் 80 சதவீத மின் விநியோகம் சரிசெய்யப்பட்டுள்ளது. தண்ணிர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து 139 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படாமல் இருக்க நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொலைத்தொடர்பு சேவை 70 சதவீதம் செயல்பாட்டில் உள்ளது. மின் விநியோகம் சீராக சீராக தொலைத்தொடர்பு சேவையும் சீராகும். 4 மாவட்டங்களில் உள்ள 900 பெட்ரோல் பங்குகளில் 805 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 95 பெட்ரோல் பங்குகளை செயல்பாட்டுக்கு கொண்டுவர நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவடியில் 3,375 பேர், தாம்பரத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர் பகுதிகளில் இருந்து 40 படகுகள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணி நடந்து வருகிறது. உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.. மடிபாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் தான் 2 நாட்களில் 73 செ.மீ வரை மழை பெய்துள்ளது. மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் ஓரிரு நாட்களில் மழைநீர் வடியும். 3 மாதங்களில் பெய்யும் மழை 2 நாட்களில் பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது.

கோவை, திருச்சி, நெய்வேலியில் இருந்து அதிசக்தி கொண்ட மோட்டார் பம்புகள் கொண்டு வரப்பட்டு மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. 30 இடங்களில் இருந்து அடையாறு ஆற்றில் 40,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 40,000 கனஅடி நீர் பெருக்கெடுத்து செல்வதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது புயலோடு சேர்ந்து இதுவரை இல்லாத அளவு கனமழை பெய்ததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ல் தென்சென்னை பகுதியில் மட்டும் தான் மிக கனமழை பெய்தது.

தற்போது அனைத்து இடங்களிலும் மிக கனமழை பெய்துள்ளது. நேற்று இரவுதான் மலை ஓய்ந்தது; ஆனால் 70 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன. 805 பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. 2015-ல் தொலைத்தொடர்பு 3 நாட்களுக்கு மேல் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொலைத்தொடர்பு சேவை 70 சதவீதம் செயல்பட்டு வருகிறது. இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதே இலக்கு. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு தயாரித்து வழங்க சென்னை மாநகராட்சியில் வசதி உள்ளது.

* தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் பேட்டி

பள்ளிக்கரனை, பெரும்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க படகுகள் தயாராக உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் விழுந்துள்ள மரங்கள் உடனே அகற்றப்பட்டு வருகின்றன. மற்ற நகரங்களில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய 1,880 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். 25 இடங்களில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளும் தீயணைப்புத்துறை மூலம் மீட்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியதாக 4,339 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் விழுந்த 300-க்கும் மேற்பட்ட மரங்களில் 191 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது, மீதமுள்ள மரங்களை அகற்றும் பனி நடந்து வருகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

* நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் பேட்டி

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் 85 சதவீத பகுதிகளில் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

* மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி

பாதுகாப்பு கருதியே சில பகுதிகளில் மிசாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் மீதமுள்ள பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து 1,050 பேர் மின்சார சீரமைப்பு பணிகளுக்காக வந்துள்ளனர். மேலும் 1,500 பேர் வரவழைக்கப்படுவர் என்று மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி பேட்டி அளித்துள்ளார்.

* காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாநகரம் முழுவதும் 18,000 போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தேவைக்கேற்ப பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி அளித்துள்ளார்.

* நிதித்துறை செயலாளர் முருகானந்தம்

சென்னை மழை வெள்ள சேதங்களை பார்வையிட வருமாறு ஒன்றிய குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 8 சுரங்கபாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டன.

The post சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்; தண்ணீர் தேக்கம் மக்கள் அவதி; தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,CHENNAH ,SHIVDAS MEENA ,CHIEF SECRETARY ,CHENNAI ,Mi'jam ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...