×

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்

புதுக்கோட்டை: விழுப்புரம் மாவட்டம் தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 17 பேர், ஒரு வேனில் நேற்றுமுன்தினம் சபரிமலைக்கு புறப்பட்டனர். இந்த வேனை திண்டிவனத்தை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (30) ஓட்டி வந்தார். பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்சி வழியாக சென்றனர். நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பைபாஸ் சாலையில் வேன் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்களான ஆறுமுகம்(35), சங்கர்(56), விமல்குமார்(27), மணிகண்டன்(38), செந்தில்குமார்(39), ரமேஷ்(54), பாஸ்கர்(36), சுந்தர்(23) ஆகிய 8 பேரும் காயமடைந்தனர்.

The post பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : 8 ,Ayyappa ,Pudukottai ,South-South ,Villupuram district ,Sabarimala ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே மண் லாரி மோதி ஐயப்ப குருசாமி பலி