×

மிக்ஜாம் புயல்: தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புதுறை தகவல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. கனமழை மற்றும் காற்றின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மரங்களும் சாய்ந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை சார்பாக 6,000-க்கும் மேற்பட்ட தீயனைப்பு துறை வீரர்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு 1 மணி முதல் காலை 6 மணிவரை தமிழகம் முழுவதும் 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதிலும் சென்னையில் அதிகபடியான தாக்கத்துடன் 40 கி.மீ. முதல் 75 கி.மீ வரையிலான காற்றின் காரணமாக சென்னையில் அதிகபடியான 24 இடங்களில் மரங்கள் சாந்துள்ளதாகவும், 40 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அழைப்புகள் வந்தவுடன் உடனடியாக சம்பந்த இடத்திற்கு சென்று மரங்களை அப்புறபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்க கூடிய இடங்களில் அங்கு நிறுத்தபட்டு தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல்: தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்புதுறை தகவல் appeared first on Dinakaran.

Tags : FIRE DEPARTMENT ,TAMIL ,Chennai ,Mikjam ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறையை...