×

அன் மெச்யூரிட்டி என்றால் என்ன?: அண்ணாமலை விளக்கம்

நாகர்கோவில்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலத்தில் மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். தெலங்கானாவில் பல இடங்களில் 2ம் இடத்திற்கு வந்துள்ளது. மக்கள் ஒரு லோக்சபா தேர்தலாகவே பார்த்து வாக்களித்துள்ளனர். 2024 தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றி பாஜ ஆட்சி அமைக்கும். மதுரையில் ஈடி அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது.

தமிழக டிஜிபிக்கு ஈ.டி அதிகாரி புகார் அளித்துள்ளார். அதில், 35 பேர் அலுவலகத்திற்கு உள்ளே வந்துள்ளனர், இரவு முழுவதும் சோதனை நடத்தினர். அங்கிட் திவாரி என்ற ஒருவரை கைது செய்ததால், எப்படி ஒட்டுமொத்த ஈடிக்கும் ஒரு பெயின்ட் கொடுக்க முடியும். தமிழ்நாடு போலீசை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஈ.டி.யின் கோரிக்கையிலும் நியாயம் உள்ளது.

சி.வி.சண்முகத்தை பற்றி இதற்கு முன்பு என்ன கருத்து சொன்னேனோ அந்த கருத்துதான் இப்போதும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, நாங்கள் கடவுளுக்கு மேல் என்று நிலையில் புனைப்பெயர் வைத்துக்கொண்டு, கடவுளாக நினைத்து செல்வதுதான் அன் மெச்யூரிட்டி என்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அன் மெச்யூரிட்டி என்றால் என்ன?: அண்ணாமலை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,BJP ,president ,Annamalai ,Madhya Pradesh ,Chhattisgarh ,Rajasthan ,
× RELATED பா.ஜ. மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது