×

ராஜஸ்தானில் போட்டியிட்ட 7 பா.ஜ எம்பிக்களில் 3 பேர் படுதோல்வி

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ சார்பில் 7 எம்பிக்கள் களம் இறக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். 3 பேர் படுதோல்வி அடைந்தனர். பாஜ மக்களவை எம்பிக்கள் தியா குமாரி (வித்யாதர் நகர்), ராஜ்யவர்தன் ரத்தோர் (ஜோத்வாரா), பாபா பாலக் நாத் (திஜாரா), மாநிலங்களவை எம்பி கிரோடி லால் மீனா (சவாய் மாதோபூர்) ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜ எம்பிக்கள் நரேந்திர குமார் (மண்டவா தொகுதி), பகீரத் சவுத்ரி (கிஷன்கர்), தேவ்ஜி பட்டேல் (சஞ்சூர்) ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதில் தேவ்ஜி பட்டேல் எம்பி, பா.ஜவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர் ஜீவா ராம் சவுத்ரியிடம் தோல்வியடைந்தார்.

The post ராஜஸ்தானில் போட்டியிட்ட 7 பா.ஜ எம்பிக்களில் 3 பேர் படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,JMB ,Rajasthan Legislative Assembly ,Java ,
× RELATED 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு...