×

மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்

சென்னை: கனமழை காரணமாக, டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணி வரை சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தியுள்ள பயணிகள், தங்கள் வாகங்களை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல் appeared first on Dinakaran.

Tags : Metro Rail Station Parking ,Chennai ,Parangimalai ,Metro Railway Station ,Dinakaran ,
× RELATED அரசு நிலங்களில் மோசடி ஆவணப் பதிவுகள்...