×

விஜயகாந்த் நலமாக இருக்கிறார்: புதிய போட்ேடா வெளியிட்டு பிரேமலதா தகவல்

சென்னை: ‘விஜயகாந்த் நலமாக இருக்கிறார். என்று புதிய போட்டோக்களை வெளியிட்டு பிரேமலதா தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ராமாவரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளி காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று முதலில் சொல்லப்பட்டது.

பிறகு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு 2 வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீரான நிலையில் இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நேற்று முழுவதும் தவறான தகவல்கள் பரவியது. இதனால், நேற்று இரவு விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் சேர்ந்து எடுத்துக்கொண்ட 2 போட்டோக்கள் வெளியிடப்பட்டது. மேலும், பிரேமலதா பேசிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் அவர், ‘கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் அவர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார். எனவே, அவரைப் பற்றிய வதந்திகளை யாரும் பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம். தயவுசெய்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post விஜயகாந்த் நலமாக இருக்கிறார்: புதிய போட்ேடா வெளியிட்டு பிரேமலதா தகவல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Premalatha ,Chennai ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி...