×

நவம்பரில் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை, டிச.2: சென்னை மக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த (நவம்பர்) மாதத்தில் 80,01,210 பயணிகள், மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10ம் தேதி 3,35,677 பேர் பயணம் செய்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,33,705 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 39,98,883 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 56,505 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 3,769 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 7,08,351 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டண தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ெமட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post நவம்பரில் 80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Rail Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்...