×

காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை குடைமிளகாய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 200 மிலி
தயிர் – 1 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கிராம்பு – 3
பட்டை – 1 இன்ச்
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, தேங்காய் பால், துருவிய இஞ்சி, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் 2 கப் நீரை ஊற்றி நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, அதை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு தூவி கிளறி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் குடைமிளகாய் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.கறி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி தயார்.

The post காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வத்தல் குழம்பு