×

வேன்-கன்டெய்னர் மோதி 3 பேர் பலி

வாழப்பாடி: விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி மின்சார வாரியத்திற்கான உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு பிக்கப் வேன் வந்தது. வேனில் விழுப்புரம் குலப்பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்குமார் (27), அரக்கோணத்தை சேர்ந்த சுதர்சன்(40), குடியாத்தத்தை சேர்ந்த பிரகாஷ்(52) ஆகியோர் வந்தனர். நேற்று காலை சுமார் 7 மணியளவில் பிக்கப் வேன் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி புதுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும், பிக்கப் வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில், சரக்கு லாரியில் இருந்த பிரவீன்குமார், சுதர்சன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (41) படுகாயமடைந்தார்.

The post வேன்-கன்டெய்னர் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Vazhappady ,Villupuram ,Salem ,Electricity Board ,Villupuram… ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட எஸ்.ஆர்.சிவலிங்கம் விருப்ப மனு