×

ரயில் மோதி டிரைவர் பலி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஆண் சடலம் கிடப்பதாக நேற்று தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இரும்புலியூர், தர்மதோட்டம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் (36) என்பதும், இவருக்கு, மல்லிகா என்ற மனைவி, காவியா, ரித்தீஷ் என்ற குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு ரயில்வே தண்டவாளத்தை பிரேம்குமார் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post ரயில் மோதி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram railway police ,Irulyur ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500...