×

7ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளான வரும் 5ம் தேதி காலை 10.30 மணியளவில் சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கப்படும். இதில் நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்த வேண்டும், என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 7ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Memorial OPS Flower-Sprinkling Ceremony ,Chennai ,AIADMK ,General ,Former Chief Minister ,Jayalalithaa ,
× RELATED மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட்...