×

மின்சாரம் பாய்ந்து வக்கீல் பலி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்

சென்னை, நவ.30: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஈஸ்வரன்கோயில் எதிரில் உள்ள ஸ்ரீ துர்கா இண்டஸ்டிரீஸ் கம்பெனி அருகில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர் சம்பத் குமார் (55), அரசு வழக்கறிஞர் (முன்னாள் மாமன்ற உறுப்பினர்) என தெரிந்தது. இவர் மழைக்காக கம்பெனி முன்புறம் தகர கூரைக்கு அடியில் ஒதுங்கியுள்ளார். அங்குள்ள மின் இணைப்பு மீட்டர் சுவர் மழையில் ஈரமாக இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு, இரும்பு தகடுகளில் மின்சாரம் பாய்ந்து அதில் நின்றதால் சம்பத் உயிரிழந்துள்ளார். பின்னர் கம்பெனி பியூஸ் கேரியர் அகற்றப்பட்டு, வெல்டிங் தொழிற்சாலையிலிருந்து கசிந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின் கசிவு ஏதும் இல்லையென உறுதி செய்யப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தபோது, மின் விபத்து தொழிற்சாலையிலிருந்து கசிந்த மின்சாரத்தால்தான் ஏற்பட்டது தெரிந்தது. விபத்திற்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.

The post மின்சாரம் பாய்ந்து வக்கீல் பலி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Power Generation Distribution Corporation ,Chennai ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Iswaran temple ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...