×

ஐநாவில் தீர்மானம்; இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது

ஐக்கிய நாடுகள் சபை: சிரியாவின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதை கண்டிக்கும் ஐநா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. சிரியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமிப்பு செய்தன. இதை கண்டித்தும், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி நடக்க இஸ்ரேல் தவறிவிட்டதால், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவில் அதன் சட்டங்கள், அதிகார வரம்புகள் மற்றும் நிர்வாக முடிவுகள் செல்லாது என அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் எகிப்து கொண்டு வந்தது.

இதற்கு ஆதரவாக 91 நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட 62 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இதற்கிடையே பாலஸ்தீனம் தொடர்பான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா கம்போஜ், இஸ்ரேலில் சிறை பிடித்த பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை வரவேற்றும், மீதமுள்ள பணயக்கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கவும் வலியுறுத்தினார்.

The post ஐநாவில் தீர்மானம்; இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது appeared first on Dinakaran.

Tags : UN ,India ,Israel ,United Nations ,Syria ,Syria… ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் போர் நாளுக்கு நாள் ஆபத்து : ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை