×

பிளஸ் 1 மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவு டிச.1ல் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 1 ,27,673 மாணவர்கள் பங்கேற்றனர்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த தேர்வு முடிவை டிம்பர் 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ரிசல்ட் என்ற தலைப்பில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு என்ற பக்கத்தில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் அறியலாம். ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியலும் இதில் வெளியிடப்படும்.

The post பிளஸ் 1 மாணவர்களுக்கான முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவு டிச.1ல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED உயர்கல்வி துறைக்கு ரூ.134.15 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்