×

வேன் மீது கார் மோதி ஐயப்ப பக்தர் பலி

சென்னை: தாம்பரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (68). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் உள்பட 4 பேர் ஒரு காரில் சபரிமலைக்கு சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று காலை அவர்கள் சபரிமலையில் இருந்து புறப்பட்டனர். காலை 10 மணியளவில் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் அருகே கார் சென்றபோது, எதிரே வந்த ஒரு வேன் மீது மோதியது. இதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து குட்டிக்கானம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வேன் மீது கார் மோதி ஐயப்ப பக்தர் பலி appeared first on Dinakaran.

Tags : Ayyappa Bhaktar ,Chennai ,Venkatesh ,Tambaram ,
× RELATED அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்புக்கு...