×

ஓட்டுநர் உடன் நடத்துநர் தேர்வு தேர்ச்சியடைந்தவர்களுக்கு பிப்.14ம் தேதி நேர்காணல்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: ஓட்டுநர் உடன் நடத்துநர் பணிகளுக்கு எழுத்து தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு வரும் பிப்.14ம் தேதி நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 685 ஓட்டுநருடன் நடத்துநர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதி வாய்ந்த 11,117 பேருக்கான எழுத்து தேர்வு கடந்த 19ம் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 20 மையங்களில் நடைபெற்றது. இதில் 9,352 பேர் தேர்வினை எழுதினர்.

அதேபோல், தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் மதிப்பெண்கள் www.arasubus.tn.gov.in இணையதளத்தில் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. அந்தவகையில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2024 பிப்.14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி, வயது, சாதி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓட்டுநர் உடன் நடத்துநர் தேர்வு தேர்ச்சியடைந்தவர்களுக்கு பிப்.14ம் தேதி நேர்காணல்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Rapid Transport Corporation ,Chennai ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 810...