×

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் 2ம் இடம்

கும்மிடிப்பூண்டி: ஈகுவார்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2020-21ம் ஆண்டு வரை வட்டார மருத்துவ அலுவலராக இருந்தவர் டாக்டர் கோவிந்தராஜ். இவரது பணிக்காலத்தில், சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். 2020-21ம் ஆண்டில் ஈகுவார்பாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.

இந்நிலையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததில் ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாநில அளவில் இரண்டாம் இடம் கிடைத்தது. இதற்கான பாராட்டு சான்றிதழ் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால் மற்றும் தற்போதைய கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜிடம் வழங்கினர். ஈகுவார்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் தனது சிறப்பான பணியால் பெருமை சேர்த்த கும்மிடிப்பூண்டி முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜிற்கு கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் தங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் 2ம் இடம் appeared first on Dinakaran.

Tags : Family Planning Surgery Primary Health Center ,Kummidipoondi ,Ekvarpalayam ,health center ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே...