×

கேரள மாநிலம் கொல்லம் அருகே கடத்தப்பட்ட 6 வயது பெண் குழந்தை மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கடத்தப்பட்ட 6 வயது பெண் குழந்தை 20 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. கேரள மாநிலம் கொல்லம் ஆசிரமம் மைதானம் அருகில் குழந்தையை விட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். தப்பிச் சென்ற மர்மகும்பலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் ஓயுர் பகுதியில் தனது 8 வயது சகோதரனுடன் டியூஷன் சென்ற வந்த 6 வயதுடைய அபிகெல் சாராராதி என்ற சிறுமியை, ஒரு பெண் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. குழந்தை கடத்தப்பட்ட தகவலறிந்த போலீசார் கட்டுப்பாட்டு அரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் விதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொல்லம் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சிறுமியை கொல்லம், ஆசிரமம் மைதானம் என்ற பகுதியில் தனியாக விட்டு சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டதன் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சிறுமியை கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர். இதையடுத்து கடத்தப்பட்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கேரள மாநிலம் கொல்லம் அருகே கடத்தப்பட்ட 6 வயது பெண் குழந்தை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kollam, Kerala ,Thiruvananthapuram ,Kollam, Kerala state ,
× RELATED சமூக வலைதளங்களில் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர் கைது