×

திமுக இளை­ஞர் அணி­யின் மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைக்க உறு­தியேற்போம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : பிறந்த நாள் வாழ்த்­து­களை, நான் மென்­மே­லும் உற்­சா­கத்­து­டன் உழைப்­ப­தற்­கான எரி­பொ­ருளா­கவே எடுத்­துக்­கொள்­கி­றேன் என்றும், சேலத்­தில், வரும் 17ம் தேதி நடைபெறும் திமுக இளை­ஞர் அணி­யின் மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைக்க உறு­தி­யேற்­போம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக இளை­ஞர் அணிச் செய­லா­ளர் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிறந்த நாள் என்­பது ஆண்­டு­தோ­றும் வரும் இன்­னொரு நாள்­தான். ஆனால், அதை நம்
சுற்­ற­மும் சூழ­லும் சேர்ந்து வாழ்­வில் மறக்­க­மு­டி­யாத சிறந்த நாளாக மாற்­று­வதை நினைக்­கை­யில் மகிழ்­வா­க­வும் நெகிழ்­வா­க­வும் இருக்­கி­றது. அதே­நே­ரம் பொறுப்பை உணர்ந்து செயல்­பட வேண்­டி­ய­தற்­கான கால கடி­கா­ர­மா­க­வும் இந்த நாளை நான் பார்க்­கி­றேன். பிறந்த நாளில், முத­ல்வர், திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்­து­தான் முதல் வாழ்த்து. நேரில் சென்­ற­தும், ‘இளை­ஞர் அணி மாநாடு குறித்து, நான் எழு­திய கடி­தத்­தைப் படித்­தாயா?’ என்­ற­படி வாழ்த்­தி­னார்­.

1988ம் ஆண்டு சென்­னை­யில் தேசிய முன்­ன­ணித் தொடக்க விழா பேர­ணி­யில், தன்­னு­டைய தலை­மை­யில், திமுக இளை­ஞர் அணி­யி­னர் தேசிய கட்­சித் தலை­வர்­கள் முன்­னி­லை­யில் அணி­வ­குத்து வந்­ததை அந்­தக் கடி­தத்­தில் நினை­வு­கூர்ந்­துள்ள தலை­வர், அதே­போன்ற ஒரு பிரம்­மாண்ட கூட்­டத்­தைச் சேலத்­தில் என் தலை­மையில் 2வது மாநில மாநாட்­டில் திரட்ட உள்­ள­தைக் குறிப்­பிட்டு, ‘கடல் இல்லா சேலம்,கருப்­புச் சிவப்­புக் கட­லி­னைக் காணட்­டும்’ என்று அந்­தக் கடி­தத்தை முடித்­தி­ருந் தார்­கள். அந்த வாழ்த்­து­க­ளு­டன் நேரி­லும் என்னை வாழ்த்­தி­யது நிறை­வாக இருந்­தது. அதன்­ பின்­னர் அண்­ணா ­கலை­ஞர் இரு­வ­ரும் துயில்­கொள்­ளும் மெரினா கடற்­க­ரை­யில் அவர்­க­ளது நினை­வி­டத்­தில் திமுகவின் மூத்­த தலை­வர்­க­ளு­டன் சென்று மரி­யாதை செலுத்­தினேன்.

அதன்­பின்­னர் கலை­ஞ­ரு­டைய கோபா­ல­பு­ரம், சி.ஐ.டி.காலனி இல்லங்­ளுக்­குச் சென்று பாட்­டி­க­ளி­ட­மும், திமுக துணைப் பொதுச்செ­ய­லா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கனி­மொழியிடமும் வாழ்த்து பெற்­றேன். அதைத் தொடர்ந்து என் தொகு­தி­யில் நான் கலந்­து­கொண்ட இரு நிகழ்ச்­சி­கள் என் வாழ்க்கையில் மறக்­க­மு­டி­யாத நிகழ்­வாக, என்­றென்­றும் நினை­வில் நிற்­கக்­கூ­டிய நிகழ்ச்­சி­க­ளாக அமைந்­தன.ஒன்று சமூக நீதிக் காவ­லர் வி.பி.சிங்கின் சிலைத் திறப்பு விழா. வி.பி.சிங் என் மன­துக்கு நெருக்­க­மான தலை­வர்­க­ளில் ஒரு­வர். அவ­ரு­டைய சிலை, அவ­ரு­டைய நினைவு நாளில், என்­னு­டைய சேப்­பாக்­கம் திரு­வல்­லிக்­கேணி தொகு­திக்கு உட்­பட்ட மாநி­லக் கல்­லூரி வளா­கத்­தில் அமைத்து, என் தொகு­திக்கு மேலும் பெருமை சேர்த்­துத் தந்­துள்­ளார் முத­ல்வர் மு.க.ஸ்டாலின்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்த வி.பி.சிங்கின் சிலை, தமிழ்­நாட்­டில் அமைக்­கப்­ப­டு­வது ஏன்? என்று, ஒவ்­வொரு இந்­தி­ய­னும் தங்­க­ளுக்­குள் கேள்வி கேட்­டுக்­கொண்­டால், அவ­ரின் சிலை ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் அல்­லவா அமைக்­கப்­பட வேண்­டும் என்ற எண்­ணம் எழும். பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு அர­சுப் பணி­க­ளில் 27 சத­வி­த இட ஒதுக்­கீட்டை வழங்­க­லாம் என்ற பி.பி.மண்­டல் தலை­மை­யி­லான ஆணை­யத்­தின் பரிந்­து­ரை­யைச் செயல்­ப­டுத்தி சமூக நீதியை நிலை­நாட்­டிய வி.பி.சிங்குக்கு கலை­ஞ­ரு­டைய இடத்­தில் இருந்து நம் முத­ல்வர் அந்­தச் சிறப்­பைச் சேர்த்­துள்­ளார்­. இந்­தச் சிலை திறப்பு விழா­வுக்கு வி.பி.சிங்கின் மனைவி உள்­பட குடும்­பத்­தி­ன­ரை­யும் உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் இருந்து முன்­னாள் முத­ல்வர் அகி­லேஷ் யாதவையும்அழைத்­தி­ருந்­தது மிக­வும் பொருத்­த­மாக அமைந்­தி­ருந்­தது.

அதைத்­தொ­டர்ந்து திமுக நிர்­வா­கி­கள் இளை­ஞர் அணி சகோ­த­ரர்­க­ளு­டன் மதிய உணவு உண்டு மகிழ்ந்­தேன். திமுகவினர் எனக்கு வழங்­கிய ‘மதிய தயா­ரிப்பு’ பொருட்­களை என் தொகு­தி­யில் உள்ள மாற்­றுத் திற­னா­ளி­கள், ஆத­ர­வற்­றோர் இல்­லங்­க­ளுக்­குச் சென்று வழங்கி மகிழ்ந்­தேன். திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செய­லா­ளர் துரைமுருகன், முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு உள்­ளிட்ட தலை­மைக் கழக நிர்­வா­கி­கள், அமைச்­சர்­கள், மாவட்ட செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட திமுக நிர்­வா­கி­கள், கலை­ஞ­ரின் உயி­ரி­னும் மேலான அன்பு உடன்­பிறப்­பு­கள், சேப்­பாக்­கம் தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி மக்­கள், இளை­ஞர் அணி­யைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள், அரசு அதி­கா­ரி­கள், காவல் துறை­யி­னர், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், திரை­யு­ல­கி­ன­ருக்­கு நன்றி.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கே.எஸ்.அழ­கிரி, வைகோ, திரு­மா­வ­ள­வன், பால­கி­ருஷ்­ணன், முத்­த­ர­சன், ஜவா­ஹி­ருல்லா, அப்­துல் சமது, திரு­நா­வுக்­க­ர­சர், பீட்­டர் அல்­போன்ஸ், செல்­வப்­பெ­ருந்­தகை, துரை வைகோ, சூப்­பர் ஸ்டார் ரஜினி, கமல், சத்­ய­ராஜ், இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்­கு­நர்­கள் அருண்­ராஜா காம­ராஜ், மாரி­செல்­வ­ராஜ், சிவ­கார்த்­தி­கே­யன், சந்­தா­னம், சூரி மற்­றும் கீர்த்தி சுரேஷ், முரளி ராம­சாமி உள்­ளிட்ட தயா­ரிப்­பா­ளர் சங்க நிர்­வா­கி­கள் இப்­படி நேரி­லும் அலை­பே­சி­யி­லும் வாழ்த்­தி­ய­வர்­கள், சமூக வலைத்­த­ளங்­க­ளின் வாயி­லாக வாழ்த்­தி­ய­வர்­கள் என அனை­வ­ருக்­கும் என் அன்­பை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

பிறந்த நாள் வாழ்த்­து­களை, நான் மென்­மே­லும் உற்­சா­கத்­து­டன் உழைப்­ப­தற்­கான எரி­பொ­ரு­ளா­கவே எடுத்­துக்­கொள்­கி­றேன். பாசிச சக்­தி­களை வீட்­டுக்கு அனுப்ப, `இந்­தியா கூட்­ட­ணி’­யின் ஒற்­று­மையை, சக்­தியை உல­குக்­குப் பறை­சாற்­றும் வகை­யில், மாநில உரிமை மீட்பு முழக்­கத்­து­டன் சேலத்­தில், வரும் டிசம்­பர் 17ம் தேதி நாம் முன்­னெ­டுக்­கும் திமுக இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைக்க உறு­தி­யேற்­போம். வாழ்த்­திய அனை­வ­ருக்­கும் என் அன்­பும் நன்­றி­யும்.இவ்­வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளை­ஞர் அணி­யின் மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைக்க உறு­தியேற்போம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...