×

உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு ஜனாதிபதியின் ‘சிறந்த செயல் திறன் விருது’: முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு சிறந்த செயல் திறன் விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இதை அதிகாரிகள், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். புதுடெல்லியில் கடந்த 5ம் தேதி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக உணவு திருவிழா நிகழ்ச்சியில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்கான விருதினை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழ்நாட்டிற்கு வழங்கினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டெல்லியில் வழங்கப்பட்ட விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

The post உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு ஜனாதிபதியின் ‘சிறந்த செயல் திறன் விருது’: முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி...