புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.
முதல் போட்டி விசாகப்பட்டிணத்திலும் (நவ. 23), அடுத்த போட்டிகள் திருவணந்தபுரம் (நவ.26), கவுகாத்தி (நவ.28), ராய்பூர் (டிச.1), பெங்களூருவிலும் (டிச.3) நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், வி.வி.எஸ்.லஷ்மண் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post ஆஸி. டி20 தொடர்: இந்திய அணிக்கு ‘ஸ்கை’ கேப்டன் appeared first on Dinakaran.