×

குஜராத் நீதிபதிகளை மாற்ற அனுமதி மறுப்பது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் உத்தரவுக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான தாமதம் குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று மனு மீது விசாரணை நடந்த போது நீதிபதிகள் கூறியதாவது: கொலிஜியம் பரிந்துரைத்த 11 நீதிபதிகளில் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் ஆறு பேர் இன்னும் நிலுவையில் உள்ளனர். அதில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நான்கு பேர் மற்றும் அலகாபாத் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் இருந்து தலா ஒருவர் உள்ளனர். கடந்த முறையும் இதுதான் நடந்தது. இது நல்ல அறிகுறி அல்ல. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் பலர் பணிமூப்பு இழக்கிறார்கள். இடமாற்றத்தை ஏற்க முடியாதவர்கள் ஏன் நீதிபதிகள் ஆக ஒப்புக்கொள்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

The post குஜராத் நீதிபதிகளை மாற்ற அனுமதி மறுப்பது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Supreme Court ,Union Govt. New Delhi ,Union government ,Gujarat High Court ,
× RELATED நீட், ஜேஇஇ மாணவர்கள் தற்கொலை வழக்கு;...