
மும்பை: உற்சாகப்படுத்தி சென்ற பிரதமருக்கு நன்றி என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ரூ.33 கோடி பரிசு வழங்கப்பட்டது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்தியா பைனலில் தோல்வி அடைந்தது ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிபோட்டி தோல்விக்கு பின் X தளத்தில் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ள முகமது ஷமி; எதிர்பாராத விதமாக நேற்றைய நாள் எங்களுக்கானதாக இல்லை; தொடர் முழுக்க எங்களுக்கு ஆதரவாக இருந்த இந்தியர்கள் அனைவருக்கும் நன்றி ட்ரெஸ்ஸிங் ரூம் வந்து, எங்களை உற்சாகப்படுத்தி சென்ற பிரதமருக்கும் நன்றி! மீண்டும் வருவோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post மீண்டு வருவோம்.. உற்சாகப்படுத்தி சென்ற பிரதமருக்கு நன்றி: முகமது ஷமி appeared first on Dinakaran.