கால் பாதம் பாதுகாக்க!

நன்றி குங்குமம் தோழி

வெளியே சென்று விட்டு வந்தால் நாம் உடனடியாக கால் பாதங்களை கழுவுவது வழக்கம். காரணம், கால் வழியாகத் தான் கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளது. கால் பாதங்கள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தா தான் நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் அதை நன்கு பராமரிப்பது அவசியம்.

*தினமும் குளிக்கும்போது பாதங்களுக்கு சோப்பு போட்டுத் தேய்க்க வேண்டும். விரல் இடுக்குகளிலும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

*கால் பாதங்களை வெதுவெதுப்பான நீரிலும், குளிர்ந்த நீரிலுமாக மாற்றி மாற்றித் தினந்தோறும் ஐந்து நிமிடமாவது வைத்து எடுப்பது கால் தோற்றத்தைப் பாதுகாக்கும்.

*கால்களுக்கும், பாதங்களுக்கும் வாரம் ஒருமுறை பாதாம் எண்ணெயை நன்றாகத் தேய்த்துக்கொண்டால் மிருதுவாக இருக்கும்.

*உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதில் கால்களை கால் மணி நேரம் நனைய வைத்தால் அழுக்குகள் நீங்கி பாதங்கள் புத்துணர்ச்சியை பெறும்.

*கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டால் அங்கு மருதாணி பத்து போட்டால் குணமாகும்.

*நல்ல காற்றோட்டமான காலணிகளை அணிய வேண்டும். ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

*கால் பாதங்களில் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள தினமும் மாய்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

The post கால் பாதம் பாதுகாக்க! appeared first on Dinakaran.

Related Stories: