ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் பணிநீக்கம் அதிகரிப்பு: நடப்பாண்டில் 2.40 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழப்பு

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் ஒரு பக்கம் பணி நீக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தாலும் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் 2022-ம் ஆண்டு 1061 தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 1,64,769 பேர் வேலை இழந்துள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 13-ம் தேதி வரை 1,059 நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 2,40,193 ஆகும்.

ஆண்டுதோறும் பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐடி துறையில் அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு தான் இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐடி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிகளை வேகமாக முடிக்க தெரிந்தோருக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. எனவே தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பழைய பாடத்திட்டத்தை மாற்றி தற்போதைய தேவைக்கேற்ப செயற்கை நுண்ணறிவு அதன் மூலம் கோடிங் செய்வது உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் பணிநீக்கம் அதிகரிப்பு: நடப்பாண்டில் 2.40 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: