×

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பேர், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பேர், மார்ச் மாதத்தில் 69,99,341 பேர், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பேர், மே மாதத்தில் 72,68,007 பேர், ஜூன் மாதத்தில் 74,06,876 பேர், ஜூலை மாதத்தில் 82,53,692 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 85,89,977 பேர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 84,37,182 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 15ம் தேதி 3,37,586 பேர் பயணம் செய்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 32,54,175 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 43,63,739 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 2,68,579 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,986 பேரும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 5,43,703 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் போடிஎம் போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 83000 86000 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Administration ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம்...