×

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. பின்னர் உரையாற்றிய அவர்; பருவமழை முன்னேற்பாடு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு பற்றி ஆலோசிக்கப்படுகிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான் முறையாக தடங்கல் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டுதான் கூறுகிறது. கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்டவற்றில் கிராமசபை கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சோழர் காலம் முதல் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன; கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவைகள் குறித்து விவாதிக்கின்றனர் இவ்வாறு கூறினார்.

The post மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Mahatma Gandhi ,M. K. Stalin ,Gram Sabha ,Tamil Nadu ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...