×

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

சென்னை, அக்.2: எழும்பூர், தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணி நேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண் (40754), திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண் (40854) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மணிக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, 3 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மற்றும் மதியம் 12.50, 1.45, 2.15 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மற்றும் மதியம் 12 மற்றும் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் ஞாயிறுக் கிழமை அட்டவணைப்படி சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Tambaram ,Southern Railway ,Chennai ,Egmore ,Kodambakkam ,Dinakaran ,
× RELATED மின்சார ரயில்கள் ரத்து