×

பாஜக இளைஞரணி சமுக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ்-க்கு அக்.13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருச்சி: பாஜக இளைஞரணி சமுக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ் ராசிபுரத்தில் கைது செய்யப்பட்டார். ராகுல்காந்தி குறித்து சமுக ஊடகத்தில் பிரவீன்ராஜ் ஆக.10-ம் தேதி அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றம்சாட்டபட்டுள்ளார். கரூரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மெய்ஞானமூர்த்தி அளித்த புகாரில் பிரவீன்ராஜ்க்கு அக்.13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த பிரவின்ராஜ் என்பவர் கடந்த ஆக.10-ம் தேதி தனது X சமுகவலைதபக்கத்தில் ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் மாவட்டத்தை சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து இன்று அதிகாலையில் ராசிபுரத்தில் சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுஜாதாவின் வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா பிரவின்ராஜை அக்.13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் திருச்சி அழைத்துச் செல்லபட்டார்.

The post பாஜக இளைஞரணி சமுக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ்-க்கு அக்.13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ilajanarani ,Samuka ,Pravinraj ,Rasipuram ,Praveenraj ,Samuha ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும்...