×

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.203 உயர்வு

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் அடிக்கடி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாடு சமையல் சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1,695க்கு விற்பனையான செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,898க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று முதல் 19 கிலோ வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.209 உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை அக்டோபர் 1 முதல் ரூ.1731.50 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி ரூ.918க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைத்த நிலையில் தற்போது மீண்டும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் சற்று அவதியில் இருக்கிறார்கள்.

The post சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.203 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...