×

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை ராஜவீதியை சேர்ந்த நகைக்கடை ஒன்றிருக்கு தங்கநகைகள் வாங்குவதற்காக பெங்களூரு சென்றுவிட்டு. சேலம் – தருமபுரி நெடுஞ்சாலை வழியாக தங்கத்துடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்தவர்கள் தங்கம் எடுத்துவந்த காரை வழிமறித்தனர்.

பின்னர் அதிலுள்ளவர்களை தாக்கிவிட்டு தங்கத்தோடு சேர்த்து காரையும் கடத்தி சென்றனர். தங்கத்தை பறிகொடுத்த கோவையை சேர்ந்த பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தங்கம் கொள்ளை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளையர்கள் வீசிச் சென்ற செல்போனின் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 5 கிலோ தங்கம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Karimangalam, Dharmapuri district ,Dharmapuri ,Karimangalam ,Dharmapuri district ,Coimbatore Rajaveedee ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது