- வேளச்சேரி
- விநாயகர் சிலை ஊர்வலம்
- தம்பரம் மாநகரக் காவல்
- தாம்பரம்
- வேளச்சேரி பிரதான
- விநாயகர் விக்கிரகம்
- தின மலர்
தாம்பரம், செப்.23: விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு வேளச்சேரி பிரதான சாலையில் நாளை (24ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்று தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நாளை (24ம் தேதி) ஊர்வலமாக கொண்டுசென்று கடலில் கரைக்க உள்ளனர். அதன்படி, தாம்பரம் மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல இருப்பதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக செல்லும் 51, 51எ, வி51, எ51 ஆகிய மாநகர பேருந்துகள் பள்ளிக்கரணை மேம்பாலத்தினை பயன்படுத்தி செல்லும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பேருந்துகள் இயங்கும்.
தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 95, 99 மற்றும் 99எ ஆகிய மாநகர பேருந்துகள் அனைத்தும் செம்மொழி சாலையினை பயன்படுத்தாமல், மாற்று வழியாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பினை சென்றடைந்து 200 அடி ரேடியல் சாலை துரைப்பாக்கம் வழியாக செல்லும். மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பேருந்துகள் இயங்கும்.
மாம்பாக்கம் சாலை வழியாக வேளச்சேரி, தாம்பரம் மெயின் ரோடு செல்லும் 51பி மற்றும் 51வி ஆகிய பேருந்துகள் மாற்று வழியாக சித்தாலப்பாக்கம் சந்திப்பினை அடைந்து, மாடம்பாக்கம் சிவன் கோயில், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக சென்று வேளச்சேரி பிரதான சாலையினை சென்றடையும் மறு மார்க்கமாக அதே வழிதடத்தில் பேருந்துகள் இயங்கும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு வேளச்சேரி பிரதான சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.