- சந்திரபாபு நாயுடு
- ஆந்திரா
- பிரதேசம்
- தெலுங்கு தேசம் கட்சி
- ஹைதெராபாத்
- சந்திரபாபு நாயுடு
- ஆந்திரப் பிரதேசம்
- தின மலர்
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் செப்.11ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்தது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை 2 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.