×

அமெரிக்கா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவி குறித்து ஆலோசனை

வாஷிங்டன்: உக்ரைன் போரை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்புவதை விட்டு ஈரான் மற்றும் வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்குவது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீரும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. அமெரிக்கா சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவியை அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளைமாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள் ராணுவ தளவாடங்கள் வழங்கு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பேசிய ஜோ பைடன் ஈரான் மற்றும் வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்குவது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீரும் செயல் என்று குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் குளிர்காலத்தின்போது வான்பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெலன்ஸ்கி கூறினார். பேச்சுவார்த்தையின் போது உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்த ஒப்புக்கொண்டதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய பிறகு ஜோ பைடன் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்கா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவி குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : President ,Zelensky ,US ,Ukraine ,Washington ,Russia ,Iran ,North Korea ,
× RELATED ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க...