
- ஜீரோ எமிஷன் தின விழிப்புணர்வு பேரணி
- கோயம்புத்தூர்
- பூஜ்ஜிய உமிழ்வு பேரணி
- கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்
- தின மலர்
கோவை, செப். 22: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பூஜ்ஜிய உமிழ்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பூஜ்ஜிய உமிழ்வு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.