
- இரணலியூர் ஏரி களங்கல்
- தாம்பரம்
- இரவள்ளியூர்
- இந்திய விமானப்படை பயிற்சி மையம்
- இரவன்லியூர் ஏரி கலங்கல்
- தின மலர்
தாம்பரம்: இரும்புலியூர் பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி இரும்புலியூர் பெரிய ஏரி உள்ளது. கடந்த 12ம் தேதி இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் ஏரியின் கலங்கல் பகுதியில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய் பதித்து தண்ணீரை வெளியேற்றினர். இதை அறிந்த படப்பை பாசனப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கலங்கலில் பதிக்கப்பட்டிருந்த குழாயை அகற்றி பள்ளத்தை மூடி தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஏரியில் மீண்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் கலங்கல் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறியது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் வந்து ஏரியை பார்வையிட்டு பின்னர் உடைக்கப்பட்ட இடத்தை மூடும் பணிகளில் ஈடுபட்ட போது, இந்திய விமானப்படை பயிற்சி மைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பொதுப்பணி துறையினர் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் நேற்று சேலையூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன் சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் உடைக்கப்பட்டிருந்த கலங்கலை பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை கொட்டி மூடி சரி செய்தனர்.
The post உடைக்கப்பட்ட இரும்புலியூர் ஏரி கலங்கல் சீரமைப்பு appeared first on Dinakaran.