×

கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கீர்த்திகாவுடன் நேற்று முன்தினம் விநாயகர் சிலையை கரைக்க மெரினா கடற்கரைக்கு ஆட்டோவில் வந்தார். நேப்பியர் பாலம் அருகே வந்ததும், செல்வி தனது மகள் கீர்த்திகாவுடன் கூவம் ஆற்றில் சிலையை கரைத்தார். அப்போது கீர்த்திகா எதிர்பாராதவிதமாக கூவம் ஆற்றில் குதித்தார். இதை கவனித்த அந்த வழியாகச் சென்ற ஆட்டோ டிரைவர் மகேஷ் (30) என்பவர், போலீசார் உதவியுடன் கூவத்தில் இறங்கி சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய கீர்த்திகாவை கயிறு மூலம் மீட்டார். தனது உயிரை பொருட்படுத்தாமல் இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலை சுதந்திரா நகர் 1வது தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் மகேஷை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

The post கூவத்தில் குதித்த பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arumbakkam ,MMDA Colony ,Keerthika ,
× RELATED பச்சை வழித்தடத்தில் வழக்கம்போல மெட்ரோ ரயில் சேவை