
- பிரமோத்சவம்
- திருப்பதி மலையப்பா
- சுவாமி
- பெரியா
- சேஷ
- திருமலா
- திருப்பதி பிரமோத்ஸவம்
- பெரிய சேஷா
- ஏழுமலையான் சாலை
திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சுவாமிக்கு சமர்பித்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த முதல்வர் ஜெகன்மோகன் தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2024ம் ஆண்டிற்கான கலெண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார். இதனைதொடர்ந்து பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நான்கு மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
The post திருப்பதியில் பிரமோற்சவம் தொடக்கம் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா: ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.