கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான சாலையில் செண்பகனூர் அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் சரிவை அகற்றியதும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. கொடைக்கானலில் நேற்று மட்டும் 20 மிமீ மழை பதிவாகியது. பல மாதங்களுக்கு பின் கனமழை பெய்தது கொடைக்கானல் பகுதி மக்கள், விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கொடைக்கானலில் கனமழை மண் சரிவு appeared first on Dinakaran.