
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், சேரங்கோடு செக்போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (33). எம்காம் பட்டதாரி. இவர் பந்தலூரில் உள்ள ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விளையாட்டில் ஆர்வம் உள்ள இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சேரம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழி மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் மற்றும் முரட்டுக்காளை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று 150 முறை புல்லட் பைக்குகளை வயிற்றில் ஏற்றி சதீஷ் கின்னஸ் சாதனை படைத்தார். கடந்த 2016ல் மும்பையை சேர்ந்த பண்டிட் தயாகுடே என்பவர் தனது வயிற்றில் 121 முறை புல்லட் பைக்குகளை ஏற்றி படைத்த கின்னஸ் உலக சாதனையை சதீஷ் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
The post வயிற்றில் 150 முறை புல்லட் பைக் ஏற்றி கின்னஸ் சாதனை appeared first on Dinakaran.