×

சிங்கப்பூர் பார்முலா 1 செய்ன்ஸ் சாம்பியன்

சிங்கப்பூர் பார்முலா 1 கார் பந்தயத்தில் பெராரி அணி வீரர் கார்லோஸ் செய்ன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 63 சுற்றுகள் (லேப்) கொண்ட பந்தயத்தை, கார்லோஸ் 1 மணி, 46 நிமிடம், 37 விநாடிகளில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். மெக்லாரென் மெர்சிடிஸ் வீரர் லாண்டோ நோரிஸ் 2வது இடமும், மெர்சிடிஸ் அணி நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் 3வது இடமும் பிடித்தனர். இதுவரை நடந்துள்ள பந்தயங்களின் முடிவில் ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (374 புள்ள்) முன்னிலை வகிக்கிறார். சக வீரர் செர்ஜியோ பெரஸ் (223) 2வது இடத்திலும், லூயிஸ் ஹாமில்டன் (180) 3வது இடத்திலும் உள்ளனர்.

The post சிங்கப்பூர் பார்முலா 1 செய்ன்ஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Singapore Formula 1 Saines ,Berrari ,Carlos Seines ,Singapore Formula 1 ,Saines ,Dinakaran ,
× RELATED பெராரி ஹைபிரிட்