×

அஷ்வினுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு… ரோகித் நம்பிக்கை

உலக கோப்பை போட்டித் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவருக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். இது குறித்து ரோகித் கூறுகையில், ‘ஒரு ஸ்பின்னர் மற்றும் ஆல் ரவுண்டராக இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அஷ்வினுக்கு உள்ளது. அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆசிய கோப்பை பைனலில், காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை சேர்த்ததற்கு காரணம் அவர் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக முழ்வீச்சில் தயாராகி இருந்தது தான். ஷ்ரேயாஸ் இப்போது 99 சதவீதம் குணமாகி விளையாடுவதற்கு தயாராகிவிட்டார். அக்சர் படேலும் விரைவில் முழு உடல்தகுதியை பெற்றுவிடுவார் என நம்பிகிறேன்’ என்றார்.

* பெருங்காய பட்டியல்!
உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், அதில் பங்கேற்க உள்ள பல்வேறு அணிகளும் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு அணியிலும் காயத்தால் அவதிப்பட்டு வரும் வீரர்களின் பட்டியல் இதோ…
இந்தியா: ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல் (விரைவில் முழு உடல்தகுதி பெற வாய்ப்பு).
பாகிஸ்தான்: நசீம் ஷா (தோள்பட்டை காயம், உலக கோப்பையில் விளையாடுவதே சந்தேகம்), ஹரிஸ் ராவுப், ஆஹா சல்மான், இமாம் உல் ஹக்.
இலங்கை: மஹீஷ் தீக்‌ஷனா (ஆசிய கோப்பை பைனலில் விளையாடவில்லை, உலக கோப்பைக்கு முன் தயாராகிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை), துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்கா, வனிந்து ஹசரங்கா.
இங்கிலாந்து: அடில் ரஷித், மார்க் வுட்.
வங்கதேசம்: தமிம் இக்பால், நஜ்முல் உசேன் ஷான்டோ, எபாதத் உசேன்.
நியூசிலாந்து: டிம் சவுத்தீ, டேரில் மிட்செல், ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன்.
தென் ஆப்ரிக்கா: அன்ரிச் நோர்க்யா, சிசந்தா மகாலா, தெம்பா பவுமா.
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் ஏகார், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன்.

The post அஷ்வினுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு… ரோகித் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Rohith ,R.R. ,Ashwyn ,Rokith ,Dinakaran ,
× RELATED அஸ்வினை தேர்வு செய்ய ரோகித்தே காரணம்: புதிய தகவல்