×

திருமணத்தடைகள் நீங்கும்: குடும்பத்தில் செல்வம் நிலைத்திருக்க வெள்ளிக்கிழமை வழிபாடு..!!

திருமணத்தடைகள் நீங்கி நல்ல கணவனை அடைய விரும்பும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தால் உரிய பலன் கிட்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் பாதியான சக்திக்கும், முருகப்பெருமானுக்கும் உரிய நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரவார விரதம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனும், வழிபடுவதற்கென்று குறிப்பிட்ட விசேஷ நாட்கள் இருந்தாலும், விரத தினங்கள் இருந்தாலும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட் டையையும் பூஜையறையையும் சுத்தம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

அதை அடுத்து வரும் சந்ததியினர் கடைப்பிடிக்கவும் பழக்கினார்கள். வெள்ளிக்கிழமை வழிபாடு பற்றி தெய்விக நூல்களும் எடுத்துரைக்கிறது. அம்பிகை பாமாலை அன்றாட வழிபாடுகளைப் பற்றி குறிப்பிடும் போது மங்கல வெள்ளியில் விரதம் இருந்தால் மாபெரும் வெற்றியைக் காணலாம் என்று கூறுகிறது. வெள் ளிக் கிழமையில் அம்பிகையை வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் வேதனைகள் அகலும். வெற்றிகள் குவியும் என்கிறது. அம்பிகை என்பவள் சிவனின் பாதியாக இருப்பவள். அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்திய போது அபயம் அளித்து காப்பாற்றியவள் அம்பிகை.

அதனால் தான் முன்னோர்கள் சக்தி இருந்தால் செய் இல்லையென்றால் சிவனே என்று அமர்ந்திரு என்று விளையாட்டாக சொல்வார்கள். சக்தி என்பது செயல்படுவது. மனிதனை செயல்படுத்த வைப்பது. அந்த செயலை செய்யும் வாழ்வை நல்ல விதமாக கடக்க அம்பிகையின் அருள் நிச்சயம் வேண்டும். வெள்ளிக்கிழமைகள் தான் அம்பாளை வழிபட ஏற்றது என்ற எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் அம்பாள் வழிபாடு நற்பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் செல்வமும், ஆரோக்யமும் என்றும் நிலைத்திருக்க அம்பிகை அருள் புரிவாள்.

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அகிலாண் டேஸ்வரி, பெரிய நாயகி, மாரியம்மா, காளியம்மா, கனக துர்க்கா என்று சக்தி வடிவங்களைக் கொடுத்து வழிபட்டு வருகிறோம். பொருள் வளமும், செல்வ வளமும், ஆரோக்யமும் மட்டும்தான் அம்பிகையிடம் பெறமுடியுமா. பெண்களுக்கு திருமணபாக்கியமும், மாங்கல்ய பலமும், குழந்தைப் பேறும், கணவன், மனைவி அந்நியோன்யமும், தைரியமும் அனைத்தையும் பெறமுடியும். கன்னிப்பெண்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் குளித்து பூஜையறை யைச் சுத்தம் செய்து விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்றையதினம் திரவ ஆகாரம் தவிர்த்து வேறு எதையும் சாப்பிடாமல் மாலை அருகே உள்ள ஆலயத்துக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வாரந்தோறும் இதைக் கடைப்பிடித்து வந்தால் நல்ல குணாளன் மணாளனாக கிடைக்கப் பெறு வான். இல்லத்திலும் ஆலயத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளை வணங்கினால் பெறுவதற்கரிய பெருவாழ்வு கிடைக்கும். திருமணத்தடையால் அவதியுறும் கன்னிப் பெண்கள் அம்பாளை சரணடைந்தால் அம்பிகையை அன்னையாய் அருள் தருவாள்.

The post திருமணத்தடைகள் நீங்கும்: குடும்பத்தில் செல்வம் நிலைத்திருக்க வெள்ளிக்கிழமை வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED இரு நீள் விசும்பு