சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள்

ஊட்டி, : ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதேபோல் படகு இல்லத்திற்கும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல் தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 500 பேரும், நேற்று சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.

Related Stories:

>