வால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை, : வால்பாறை பகுதியில் தொடர்ந்து மூடுபனி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆழியாரில் இருந்து வால்பாறை சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகள் கொள்ள மலைப்பதையில், அட்டகட்டி முதல் கவர்கல் வரையிலான மலைப்பாதையில் நிலவும் குளிர்ச்சியான கால நிலையும், தற்போது மேக கூட்டங்கள் மலைகளில் படர்ந்த உள்ளதும் கண்ணை கவரும் விதமாக உள்ளது.

 

இந்நிலையில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மீது மூடுபனி  தவழ்ந்து செல்வதும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகள் இதனை புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.இந்நிலையில் வால்பாறையில் அரசு அறிவித்த சுற்றுலா திட்டங்களை அதிகாரிகள் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories:

>