×

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் : சாரல் மழையால் குதூகலம்

சேலம்:  தொடர் விடுமுறையையொட்டி, சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
ஆயூத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. கடந்த சில நாட்களாக  பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தொடர் விடுமுறையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனையடுத்து, 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனை தொடர்ந்து கடைசி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.

குடும்பத்தினருடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சாவரி செய்தனர். மேலும், அண்ணா பூங்கா, படகு சவாரி, ரோஜா தோட்டம், பக்டோ பாயிண்ட், மான் பூங்கா, லேடீஸ் சீட் போன்ற இடங்களில் குடும்பத்தினருடன் சென்று அலங்கார மலர்களை கண்டு ரசித்தும், போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், ஏற்காட்டு மலையின் உயரமான பகுதியில் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தும், சேலம் நகரத்தின் அழகையும் கண்டும் மகிழ்ந்தனர். மாலையில் தீடிரென சாரல் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழச்சியடைந்தனர்.


Tags : holidays ,Yercaud ,series ,
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...